அவுஸ்திரேலியாவிற்கு என்னவானது பங்களாதேஷில் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி

அவுஸ்திரேலியாவிற்கு என்னவானது பங்களாதேஷில் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி..!

வங்கதேச கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் ,பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம்பெற்று வருகின்றது.

முதலாவது போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய அவுஸ்திரேலியா, இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மட்டுமே தான் பெற்றுக்கொண்டது. 122 எனும் இலகுவான இலக்குடன் ஆடிய பங்களாதேஸ் 5 விக்கெட்டுக்களால் போட்டியில் வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் மீதமிருக்க, 2-0 என வெற்றி பெற்று பஙலகளாதேஸ் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

T20 உலக கிண்ணப் போட்டிகளுக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணியின் இறுதி சர்வதேச தொடராக இந்த தொடர் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி பெறுதிகள் ரசிகர்களுக்கு பெருத்த கவலையை தோற்றுவித்துள்ளது

அவிஸ்ரேலிய கிரிக்கெட் அணிக்கு என்னவானது எனும் கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் அலை மோதுகின்றன.