அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட தயாராகும் யுவராஜ் சிங் அழைப்பை ஏற்பாரா ?

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட தயாராகும் யுவராஜ் சிங் அழைப்பை ஏற்பாரா ?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரர் யுவ்ராஜ் சிங் அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் கழகமொன்றில் இணைந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அந்த கிரிக்கெட் கழகத்தின் தலைவர் மலின் புள்ளைநாயகத்திடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மெல்பேர்ன் கிழக்கு கிரிக்கெட் சங்கத்தின் ஒரு கழகமாக இருக்கின்ற முல்கரேவ் கழகத்தில் இருந்து அழைப்பு வந்து இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரான டிஎம் டில்ஷான் அதேபோன்று உபுல் தரங்க ஆகியோரை அந்த கழகம் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்களாக ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் அதேபோன்று தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் டி வில்லியர்ஸ், மேற்கிந்திய தீவுகளின் கெயில் ,லாரா ஆகியோரையும் வளைத்துப் போடும் முயற்சிகளில் இந்த கழகம் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறது.

சனத் ஜெயசூரிய இந்த கழகத்தின் தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் சர்வதேச புகழ் வாய்ந்த பல வீரர்களை இணைத்துக் கொள்கின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை கவனிக்கத்தக்க விடயமாகும்.