அவுஸ்திரேலியாவை அதிர வைத்த பங்களாதேஷ், வரலாற்றை மாற்றி எழுதியது..!

அவுஸ்திரேலியாவை அதிர வைத்த பங்களாதேஷ், வரலாற்றை மாற்றி எழுதியது..!

பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொடுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்களாதேஷ் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அவர்களது கிரிக்கெட் சரித்திரத்திலேயே அவுஸ்திரேலிய அணியை முதல்முறையாக தொடரொன்றில் வெற்றிகொண்டு பங்களாதேஷ் சாதித்துள்ளமையும் முக்கியமானது.

முன்னதாக முதல் 3 போட்டிகளிலும் வெற்றியைப் பெற்ற பங்களாதேஷ் அணி தொடரை இலகுவாக 3-0 என்று வெற்றிகொண்டது, அதன்பின்னர் 4 வது போட்டியில் போராடி ஒரு ஆறுதல் வெற்றியை அவுஸ்திரேலியா தனதாக்கியது.

இந்தநிலையில் இன்று இடம்பெற்ற 5 வதும் இறுதியான T20 போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை மட்டுமேதான் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு ஆடிய அவுஸ்திரேலிய அணி சாகிப் அல் ஹசனின் சுழல் ஜாலத்தில் அகப்பட்டு வெறுமனே 62 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்த சாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுக்களை அள்ளினார்.

இன்று அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்ட 62 ஓட்டங்கள் அவர்களது T20 போட்டிகளில் பெற்றுக்கொண்ட குறைவான ஓட்ட எண்ணிக்கையாக பதிவானது.

இதன் மூலம் 60 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி தொடரை 4-1 என கைப்பற்றி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணி இறுதியாக விளையாடிய 5 T20 தொடர்களையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.