அவுஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்திய மகளிர் அணி..!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட இந்திய மகளிர் அணிக்கும் ,அவுஸ்திரேலியா மகளிர் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது .
தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொண்டது, இரண்டாவது போட்டியில் சர்ச்சைக்குரிய நோ போல் காரணமாக இறுதி நேரத்தில் அவுஸ்ரேலியா வெற்றியை தனதாக்கி இருந்தது.
இன்று இந்தியா என்ன செய்யப்போகிறது என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்திய வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே அவுஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
87 என்பது ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியாவிற்கு கடந்த போட்டியில் சதம் அடித்த மூனி அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார், அதன் பின்னர் வந்த வீராங்கனைகளும் மிகச் சிறப்பாக விளையாட அவுஸ்திரேலிய 6 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
265 என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய இந்தியாவிற்கு ஸ்மிருதி மந்தனா , ஷெபாலி வர்மா ஆகியோர் ஓர் அற்புதமான ஆரம்பப் இணைப்பாட்டத்தை புரிந்தனர், அதன் பி்ன்னர் மிகச் சிறப்பாக தொடரின் அறிமுக வீராங்கனை ஜஸ்டிகா பாட்டியா ஆட இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றி கனவை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
ஜஸ்ட்ரிகா பாட்டியா எனும் இருபத்தொரு வயதான வீராங்கனை ?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்த தொடரில் தான் அவர் அறிமுகம் மேற்கொண்டார், ஷெபாலி வெர்மாவுடன் சேர்ந்து இரண்டாவது விக்கட்டில் சத இணைப்பாட்ட சாதனை புரிந்திருந்தார் .
அவருடைய துடுப்பாட்டம் இன்று இந்திய மகளிர் அணியினுடைய வெற்றிக்கு பிரதானமான காரணமாக இருந்தது, அதற்கு பின்னர் சகலதுறை வீராங்கனை தீப்தி சர்மா, ஸ்னே ரானா இவர்களெல்லாம் இடையிடையே வந்து மிரட்டி இருந்தார்கள்.
ஆரம்பம் முதலே அவுஸ்ரேலிய அணிக்கு மரண பயத்தை தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒரு விறுவிறுப்பான போட்டியில்தலைவி , அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் இன் பொறுப்பற்ற துடுப்பாட்டம் தான் எல்லோருக்கும் விசனத்தை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக 16 டெஸ்ட் வெற்றிகளை பெற்று அசைக்க முடியாத அணியாக வலம் வந்த அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்த ஒரு கங்குலி போல், மெக் லெனிங் தலைமையில் மகளிர் கிரிக்கெட்டில் கோலோச்சிக்கொண்டு தொடர்ச்சியான இருபத்து ஆறு வெற்றிகளைப் பெற்றுவந்த அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்தினார் மிதாலி ராஜ்.
அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தியாவின் வழக்கமாகி இருக்கிறது ????
#AUSvIND