அவுஸ்திரேலிய, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான கொரோனா சிக்கல் நிலை காரணமாக அடுத்து வரும் 14 போட்டிகளில் ரத்தாகும் நிலையில் …!

அவுஸ்திரேலிய, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான கொரோனா சிக்கல் நிலை காரணமாக அடுத்து வரும் 14 போட்டிகளில் ரத்தாகும் நிலையில் …!

அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெறவிருந்த நிலையில் வீரர்கள் அல்லாத ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்த பட்டதை அடுத்து நேற்று திடீரென போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் அடுத்து வரவுள்ள 14 சர்வதேச ஆட்டங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டுவென்டி 20 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இதனைவிடவும் இப்போது இடம்பெறும் மேற்கிந்திய தீவுகள் , அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மீதமான இரண்டு போட்டிகளிலும் இந்த நிலைமை தொடரவுள்ளது.

அத்தோடு அவுஸ்திரேலிய அணியின் பங்களாதேஸ் சுற்றுலாவும் சிக்கலை சந்திக்கவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் தங்கள் அணிக்குள் புதிய Covid 19 தொற்றுக்கள் எதுவும் காணப்படாது என்று நம்புகின்றன, இல்லையெனில் பாகிஸ்தானின் கரீபியன் சுற்றுப்பயணம் சந்தேகத்திற்குரியதாக இருக்கும்.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளது, எட்டு நாட்களில் ஐந்து போட்டிகளும் இடம்பெறும் வண்ணம் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு ஆகஸ்ட் 13 முதல் தொடங்கவுள்ள இரண்டு டெஸ்ட் தொடர்களுக்கும் இதனால் சிக்கல் உருவாகும் நிலையே உள்ளது.

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கும் சிக்கல்கள் இருக்கலாம், இது கடந்த வியாழக்கிழமையே குறித்த தொடர் உறுதி செய்யப்பட்டது.

அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய அணி, இறுதியாக வங்கப் புலிகளுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் டி 20 போட்டியுடன் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு இந்த அணி டாக்காவுக்கு நேராக பறக்க அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஆரப்பமாகும் சுறுப்பயணத்துடன் ஒரு வாரத்தில் ஐந்து ஆட்டங்கள் விளையாட திட்டமிடப்பட்டன.

மேலே உள்ள அனைத்து போட்டிகளும் இப்போது பெரும்பாலும் வெள்ளிக்கிழமை(23) சோதனையின் பின்னான முடிவுகளை சார்ந்துள்ளது.

இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு (AEST) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள் தலைவர் ஜானி கிரேவ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஒரே ஹோட்டல்களின் வெவ்வேறு தளங்களில் தங்கியிருப்பதாக கிரிக்கெட் தரப்பு தெரிவித்துள்ளது, ஆனால் செயின்ட் லூசியாவிலிருந்து பார்படோஸுக்கு இரு அணிகளும் சனிக்கிழமை ஒரு  விமானத்திலேயே பயணத்தை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.