அவுஸ்ரேலியாவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய இந்திய அணி..!

காயம் காரணமாக டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்து நாலாவது டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் சதமடித்த உஸ்மான் கவாஜா, அடுத்த போட்டிக்கு டிராவிஸ் ஹெட் தயாராகிவிட்டால் அணியில் இடம்பெற மாட்டார்.

முதல் உரிமை டிராவிஸ் ஹெட்டுக்குத்தான்.
காரணம் கவாஜாவின் வயது 35. ஹெட்டின் வயது 28.
ஆசியர்கள் என்றால் ஒரு ஓரவஞ்சனை ஆஸியில் உண்டு. ஆனால் இந்த விசயத்தில் அப்படி சொல்ல முடியாத நிலை.

அவர்கள் தொலைநோக்காய் ஒவ்வொரு பார்மட்டுக்கும் அணியை கட்டமைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பரிசோதனை முயற்சிகளை எல்லாம் சாதாரண காலங்களில் செய்து வலிமையான அணியை உருவாக்கிக்கொண்டு icc கோப்பைகளை அடிப்பதுதான் அவர்களின் திட்டம். யாருக்கும் வலிக்காதபடி சிரித்த மாதிரியே செயல் திட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

கேமரூன் கிரீன் என்ற பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரை இந்திய அணி ஆஸி போன போது கொண்டுவந்தார்கள். அதில் க்ரீன் பெரிதாய் ஜொலிக்கவில்லை. திரும்பவும் தற்போது ஆசஷ் தொடரில் கொண்டு வந்திருக்கிறார்கள். கிரீன் தற்போது விக்கெட் எடுக்கவும் சின்ன சின்ன ஸ்கோர் அடிக்கவும் ஆரம்பித்து விட்டார். பவுலிங் லைன்&லென்த்தும் நல்லாவே இருக்கு. இனி SENA நாடுகளில் அணியில் க்ரீன் பெயர் கட்டாயம் இருக்கும். கூடுதலாய் ஒரு பேட்ஸ்மேனை தேத்தி விட்டார்கள். இனி ஆஸி டெஸ்ட் போட்டிகளில் பத்தாம் இட பேட்ஸ்மேனும் ஒரு பார்ட்னர்ஷிப்பில் ஈடுபடுவார்.

அப்படியே இந்திய டெஸ்ட் அணி பக்கம் வாங்க என்ன நடக்குது? ஒரு இளைஞன் சதமடித்துக் காட்டினாலும், வரிசையா சொதப்பறவனுக்குப் பதிலா அணியில இடம் கிடையாது. ஏற்கனவே குறிப்பிடும்படி அணிக்கு பங்களிப்பு செஞ்சிருந்தாலும், வரிசையா சொதப்பறவனுக்குப் பதிலா வாய்ப்பு கிடையாது. தொலைநோக்கா இவனுங்க என்ன பண்றானுங்கனு பார்த்தா, மூளைக்கெட்டுன தூரம் வரை அப்படியொன்னே தெரியல.

ஆஸியா இருந்திருந்தா ரகானேவும் புஜாராவும் வீட்டுச்சோறு சாப்பிட்டுக்கிட்டு உள்நாட்டு போட்டிகள்ல ஆடிக்கிட்டு இருந்திருப்பாங்க மறுவாய்ப்புக்காக. போன மேட்ச்ல பண்ட் அவுட்டான விதத்துக்காகவே கொஞ்சநாள் ஜாலியா கேர்ள் பிரன்ட் கூட சுத்திட்டு வானு அனுப்பியிருப்பாங்க.

மாளாத வாய்ப்புக்கள கொட்டித்தந்து ஒருத்தன் ஸ்கோர் பண்றது எப்படியானதுனா, சூதாட்டத்துல ஒருத்தன் தோக்க தோக்க பணம் தந்து ஆட வைச்சி, அதுல அவன் ஏதாவது ஜெயிக்கறது மாதிரி. கடைசியில கூட்டிக்கழிச்சி பார்த்தா நட்டம்தான் மிஞ்சும். அதில்லாம திறமையான இளம் வீரர்கள் காரணமே இல்லாம வெளிய இருக்காங்க. அவங்க திறமையோட, நம்பிக்கை, வயசம் வீணா போகுது. ஸ்ரேயாஸ் ஒருமுறை இதுக்கு மேல அணிக்குள்ள வர நான் என்ன செய்யறதுனே தெரியல. ஒருமாதிரி சலிப்பாகிட்டே வருதுனு சொன்னதுதான் ஞாபகத்து வருது.

இருக்கறதுலயே சுயநலமான, முட்டாள்த்தனமான கிரிக்கெட் போர்டு&அணி, BCCI&இந்திய அணிதான்!

Richards