அவுஸ்ரேலியாவில் டெஸ்ட் விளையாடப்போகும் ஆப்கானிஸ்தான்..!

கிரிக்கெட்டின் வல்லரசாகக் காணப்படும் அவுஸ்திரேலிய நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் மிகப்பெரிய வாய்ப்பொன்று வளர்முக கிரிக்கெட் அணியான ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்துள்ளது.

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் எதிர்கால போட்டி அட்டவணை தொடர்பான தகவலில் இன்றைய தினம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் மைதானத்தில் இந்த வரலாற்றுப் பெருமைமிகு டெஸ்ட் போட்டி நவம்பர் 27 ம் திகதி இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்துடனான ஆஷஸ் போட்டிகள் டிசம்பர் 8 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னரே இந்த போட்டி அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும் .

 

 

2018 ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்திருந்தது, தனது கன்னி டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் ஆரம்பித்த  ஆப்கானிஸ்தான் அணி, இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் தலா ஒவ்வொரு டெஸ்ட்டிலும் ,சிம்பாவே அணியுடன் 2 டெஸ்ட்டிலுமாக மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது.

இவற்றில் பங்களாதேஷ், அயர்லாந்து, சிம்பாவே அணிகளுடனான போட்டிகளில் 3 வெற்றிகளையும் ஆப்கானிஸ்தான் வெற்றிகளைக் குவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.