கிரிக்கெட்டில் ஜொலிக்க சிறப்பு திறமைகள் வேண்டுமா இல்லை நல்ல நம்பிக்கையான நேர்மறையான மனநிலை வேண்டுமா என்றால் நல்ல மனநிலைதான் வேண்டும். கிரிக்கெட் அடிப்படைகளில் தேறியிருந்தாலே போதும்.
இதற்கு உதாரணமாய் இன்று டிராவில் முடிந்த ஆஸிvsஇங்கி ஆஷஸ் நாலாவது ஆட்டத்தை சொல்லலாம்.
இதற்கு முன் மொத்தம் நடந்த மூன்று ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு நம்பிக்கையளிக்கும் விதமான செசன் ஒன்றே ஒன்றுதான் அமைந்திருந்தது. ரூட்டும் மலானும் அரைசதமடித்த அந்த செசன் மட்டுமே.
நிலைமை இப்படி இருக்க 2014 போல மீண்டும் ஒயிட்வாஷ் வாங்கும் அவமானத்திலிருந்து கடைசி ஒருவிக்கெட்டில் தப்பித்த இங்கிலாந்திற்கு இந்த ஆட்டத்தில் முதல் நம்பிக்கையை ஸ்டோக்ஸ் தன் அட்டாக் பேட்டிங்கால் அளிக்கிறார். அதை அப்படியே எடுத்து சதமடித்து இன்னும் அந்த நம்பிக்கையை அதிகரிக்கிறார் பேர்ஸ்டோ. வுட் ஆடிய க்விக் 30+ ரன் கேமியோ இங்கிலாந்து அணியின் பாசிடிவ் அப்ரோச்சை அவர்கள் போராடத் தயாராகிவிட்டதை ஆஸிக்கு அறிவிக்கிறது.
இந்த இணையின் பாசிடிவான பேட்டிங் அட்டாக்தான் ஆஸி தேவையான ஸ்கோரை எடுத்திருக்கும் போது டிக்ளேர் செய்யாமல் கேப்டன் கம்மின்ஸை தள்ளிப்போட வைத்தது. இந்த டிராவுக்கு மிக முக்கியக் காரணம் இதுதான். இதற்கு முக்கியக்காரணம் ஸ்டோக்ஸ்-பேர்ஸ்டோ இணையின் பாசிடிவ் மனநிலைதான்.
இது அப்படியே இதுவரை உயிரே இல்லாமல் இருந்த இங்கிலாந்து ஓபனிங்கில் எதிரொலிக்க க்ரோவ்லி அதிரடியாய் 70+ அடிக்கிறார். இந்த நம்பிக்கை இரண்டாவது இன்னிங்சிற்கு போதுமானதாக இருக்க, மீண்டும் ஸ்டோக்ஸ்-பேர்ஸ்டோ இணை கரையிலிருந்த கப்பலை கடலுக்குள் முக்கால்வாசி தள்ள, இறுதி இரண்டு ஓவரில் பிராட்-ஆன்டர்சன் முழுசாய் தள்ளிவிட சுபம் போடப்படுகிறது இங்கிலாந்து அணி தரப்பில் நாலாவது டெஸ்டில்!
ஸ்பெசல் டேலன்ட்ஸ், பெஸ்ட் ஸ்ட்டேடர்ஜி, பக்கா கிரிக்கெட் நாலேட்ஜ் எது இருந்தாலும் பாசிடிவ் இன்டென்ட் இல்லனா டிரஸ்ஸிங் ரூம்ல சோக கீதம்தான்.
இதுக்கான உதாரணம்தான் சென்ற 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் சோக கீதம் ஒலித்தது!
Richards