அவுஸ்ரேலியாவுக்கு பெருத்த பின்னடைவு – தொடரை இழக்கும் ஸ்டார்க்..!

ஒருநாள் போட்டிகளையும் தவறவிடும் ஸ்டார்க், ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டார்..!

இலங்கையில் நடந்த முதல் டி20 போட்டியின் போது உபாதையடைந்ததால் பந்து வீசிய விரலில் ஆறு தையல்கள் போடப்பட்டதால் ஒருநாள் தொடரையும் ஸ்டார்க் தவறவிடுகிறார்,

இடது கை ஆட்டக்காரர் டெஸ்ட் தொடருக்குத் தகுதியானவராக இருப்பார் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது.

இதற்கிடையில் ஸ்டார்க்கிற்கு பதிலாக Jhye Richardson ஐ அவர்களின் ஒரு நாள் சர்வதேச அணியில் சேர்த்துள்ளனர்,

ரிச்சர்ட்சனுக்கு பதிலாக நாதன் மெக்ஆண்ட்ரூ ஆஸ்திரேலியா A அணியில் இணைவார் எனவும் கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.