அவுஸ்ரேலியாவுடனான தொடரை வெல்வது யார் – முன்னாள் கிரிக்கட் ஜாம்பவான்களின் கணிப்பு விபரம்..!

சுற்றுலா உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் ஆட்டம் கொழும்பு ஆர்.பிரிமதாசா மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த சுற்றுப்பயணத்தை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்  நெட்வொர்க்கின் ஒரு பகுதியான ஃபாக்ஸ் கிரிக்கெட் சேனல் ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்புகிறது.

இதற்கிடையில், ஃபாக்ஸ் கிரிக்கெட் இன்று பல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களை டி20 போட்டிகள் குறித்த சிறப்பு கலந்துரையாடலுக்காக தங்கள் அறைக்கு அழைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மார்க் வாக், ஆலன் பார்டர், மைக்கேல் வாகன், மைக் ஹஸ்ஸி, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவுஸ்ரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரின்போது அவுஸ்திரேலியாவை இலங்கை 2-1 என்ற கணக்கில் வெற்றிகொள்ளும் என்று முன்னால் அவுஸ்ரேலிய வீரர் மார்க் வோ கணித்திருக்கிறார்.

அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதுக்கும் தீக்ஷன தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேநேரமர நடைபெறும் இந்த டி20 போட்டியில் இலங்கை 3-0 என்ற கணக்கில் மாபெரும் தோல்வியை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் அதிக ரன்கள் பெறுவார் என்றும், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்துவார் என்றும் ஆடம் கில்கிறிஸ்ட் மேலும் தெரிவித்தார்.

அலன் போடர், மைக்கல் ஹஸ்ஸி , மைக்கல் வோகன் ஆகியோர் தொடரை அவுஸ்ரேலியா 2-1 என வெற்றிகொள்ளும் எனவும் கணித்துள்ளனர்.

YouTube காணொளிகளுக்கு ?

இலங்கை vs அவிஸ்ரேலிய தொடரில் எதிர்பார்க்கப்படும் சாதனைகள் ?

Instragram ல் அதிக followers கவண்ட விளையாட்டு வீரர்கள் ?