அவுஸ்ரேலிய உலக்கிண்ண அணியில் இடம்பிடிக்கப்போகும் மும்பை IPL வீரர்..!

 

நடப்பு டி20 உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவின் உலக கோப்பை அணியில் அதிரடி வீரர் டிம் டேவிட் அணியில் இணைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும், சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்டு தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் டிம் டேவிட், அவுஸ்திரேலிய தேசிய அணியில் இணைய உள்ளதாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

டி20 போட்டிகளில் சராசரியாக 34 ரன்கள் மற்றும் ஸ்டிரைக் ரேட் 165 உடன், டேவிட் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டி20 பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார்,

கடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி அதிக கவனத்தை ஈர்த்தவர், எவ்வாறாயினும் எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்திற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. அந்த அணியில் டிம் டேவிட்டின் பெயரும் இடம்பெறப் போவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எதுஎவ்வாறாயினும் இறுதி அறிவிப்புக்காக காத்திருக்கலாம்.