ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேர்வுக் குழு, அடுத்தமாதம் இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள T20 தொடருக்கான அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கை தேசிய அணி 05 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
போட்டிகள் 11 பிப்ரவரி 2022 முதல் SCG, Manuka Oval மற்றும் MCG ஆகிய மூன்று மைதானங்களில் இடம்பெறவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பானுக ராஜபக்ச மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. ஆயினும் குசல் மென்டிஸ், தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
அணியின் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்
01) தசுன் ஷானக – கேப்டன்
02) சரித் அசலங்க – துணைத் தலைவர்
03) அவிஷ்க பெர்னாண்டோ
04) பத்தும் நிஸ்ஸங்க
05) தனுஷ்க குணதிலக்க
06) குசல் மெண்டிஸ்
07) தினேஷ் சந்திமால்
08) சாமிக்க கருணாரத்ன
09) ஜனித் லியனகே
10) கமில் மிஷாரா
11) ரமேஷ் மெண்டிஸ்
12) வனிந்து ஹசரங்க
13) லஹிரு குமார
14) நுவான் துஷார
15) துஷ்மந்த சமீர
16) பினுர பெர்னாண்டோ
17) மகேஷ் தீக்ஷனா
18) ஜெஃப்ரி வாண்டர்சே
19) பிரவீன் ஜெயவிக்ரம
20) ஷிரான் பெர்னாண்டோ –
ஆகியோரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.