இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் அண்மையல் சக அணி வீரர் வாஷிங்டன் சுந்தரை சந்தித்து அவரது செல்ல நாய் ‘Gabba’வுடன் விளையாடுவதைப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
சுந்தர் பிரிஸ்பேனில் ‘Gabba’ இந்தியாவின் அற்புதமான டெஸ்ட் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் அத்தோடு தனது செல்லப்பிராணிக்கு வெற்றியின் நினைவாக அரங்கத்தின் பெயரை (Gabba) வைக்க முடிவு செய்தார்.
அதன்படி வாஷிங்டன் சுந்தர் தனது டுவிட்டரில் நடராஜன் தனது நாய் Gabba வுடன் விளையாடும் கிளிப்பைப் பகிர்ந்து கொண்டார்.
சுந்தர் மற்றும் நடராஜன் இருவருக்கும் ஆஸ்திரேலியாவில் விசித்திர சம்பங்கள் நடந்தேறின. வலைப் பந்துவீச்சாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினர்.
Gabba ல் ஆஸ்திரேலியாவை இந்தியா திணறடித்ததில், ஆஸிக்கு எதிரான தொடரில் வெற்றி பெறுவதற்கு தமிழக வீர்ர்கள் இருவர் முக்கிய பங்கு வகித்தனர்.
சுந்தர் இந்தியாவை சரிவிலிருந்து மீட்க உதவினார் ,போட்டியில் பெறுமதியான 62 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் நடராஜன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் சிறப்பம்சம்.
சுந்தர் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பயிற்சிப் போட்டியில் விரலில் காயம் ஏற்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
நடராஜனும் முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வருகிறார்.
எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி T20 உலகக்கிண்ண போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் இடம்பெறவுள்ள நிலையில், இந்தியாவின் முதல் தெரிவு அணியில் இடம் பிடிப்பார்கள் என நம்பப்படும் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் உபாதைகளால் அவதி படுகின்றனர்.
இந்த உபாதைகளுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் தங்கள் ஓய்வு நேரத்தை Gabba நாயுடன் மகிழ்ச்சியுடன் கழித்த வீடியோவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
When Gabba had his friend over! ?@Natarajan_91 pic.twitter.com/XJws1BUZPS
— Washington Sundar (@Sundarwashi5) August 8, 2021