அவுஸ்ரேலிய ரசிகரை தாக்க முற்பட்ட இலங்கை ரசிகர்- ஆர் பிரேமதாச மைதானத்தில் சம்பவம்..!
இலங்கைக்கான சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
259 எனும் இலக்குடனர ஆடி வரும் அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தருணத்தில் மானஷ் லபுச்சேனர ஆட்டமிழந்து வெளியேறுகின்ற போது பிரேமதாச மைதானத்தில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு அரங்கேறியது.
மைதானத்திற்கு வந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் மீது இலங்கை ரசிகர்கள் ஒருவர் ரகளையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடு எதிர்கொண்டு கொண்டிருக்கும் டொலர் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டுக்குள் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மீது இந்த மாதிரியான விரும்பத்தகாத நடவடிக்கைகளில் இலங்கை ரசிகர்கள் ஈடுபடுவது என்பது நாட்டுக்கு மட்டுமல்லாது கிரிக்கெட்டுக்கும் இது ஒரு சிக்கலை ஏற்படுத்தக் கூடிய விடயம் என்பது குறிப்பிடத்தக்கது .
ஆகவே இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றி தோல்வி இரண்டையும் கடந்து நாட்டின் நிலைமையை புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.