இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டிக்கு முன்னதாக ஊடகவியலாளர்களை கோஹ்லி சந்தித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
2017 ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின்னர் இந்தியாவின் பிரதான சுழல் பந்து வீச்சாளரான அஷ்வின் ஏன் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படுவதில்லை என்று இன்று கோஹ்லியிடம் இன்று கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
அதற்கு இன்னுமொரு தமிழக வீரரான வோஷிங்டன் சுந்தரே காரணம் என்று கோஹ்லி பதிலளித்தார்.
வாஷிங்டன் எங்களுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.. ஒரே இடத்தில் இரண்டு வீரர்களை (வாஷிங்டன் மற்றும் அஸ்வின்) ஒரே இடத்தில் விளையாடுவதை ஒரு அணி கொண்டிருக்க முடியாது.
எனவே வோஷிங்டன் சுந்தர் வெளியில் சென்றாலொழிய அஷ்வின் அணிக்கு திரும்புவது கடினம் என்று கோஹ்லி பதிலளித்தார்.
ஆகமொத்தத்தில் அஷ்வினின் இடத்தை சுந்தர் கைப்பற்றிவிட்டதாகவே கோஹ்லியின் பதில் அமைந்துள்ளது.