அஸிசுல்லா ஃபாஸ்லி மீண்டும் ஏசிபி தலைவராக நியமனம் – தலிபான்கள் ஆதரவு..!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவராக முன்னர் செயல்பட்ட அஸிசுல்லா ஃபாஸ்லி மீண்டும் ஏசிபி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அடுத்து வரவிருக்கும் போட்டிகளுக்கான ஏசிபியின் தலைமை மற்றும் நடவடிக்கைகளை வழிநடத்துவார் என்று ஏசிபி ட்வீட் செய்துள்ளது.

2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது அஸிசுல்லா ஃபாஸ்லி ACB தலைவராக செயல்பட்டவர்,  ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் குறித்த தொடர் மோசமான தொடராக அமைய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான குல்படின் நாய்ப் மற்றும் ACB தலைவர் அஸிசுல்லா ஃபாஸ்லி ஆகியோர் பதவி நீக்கப்பட்டனர்.

இந்தநிலையிலேயே மீண்டும் அவர் பதவிக்கு வந்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அப்துல்லா முஷாரி தலிபான்களுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானின் புதிய கிரிக்கெட் சபைத் தலைவரை சந்தித்ததுடன், முன்னாள் ஆப்கானிஸ்தான் அணித் தலைவர்களான  நவ்ரோஸ் மங்கல் மற்றும் அஸ்கர் ஆப்கானையும் சந்தித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி இலங்கை செல்லவுள்ளது.