அஸ்வினை அணியில் சேர்க்க வற்புறுத்தியது யார் தெரியுமா ?

அஸ்வினை அணியில் சேர்க்க வற்புறுத்தியது யார் தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணியின் T20 உலகக் கிண்ணத்துக்கான அணி விபரம் வெளியிடப்பட்டது.

இதில் 2017 ஆம் ஆண்டு முதல் T20 போட்டிகளில்  விளையாடாமல் இருந்து வந்த அஸ்வின், திடீரென உலககிண்ண போட்டிகளுக்கான அணியில் உள்ளே கொண்டு வரப்பட்டது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

இதனால் என்ன காரணத்துக்காக அஸ்வினை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் என ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது.

 

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் உதவி தலைவர் ரோஹித் சர்மாவின் வற்புறுத்தலும், ஆலோசனையின் அடிப்படையிலேயே அஸ்வின் அணிக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றபோது ரோஹித் சர்மா அஸ்வினுடைய பந்துகளை சந்திப்பதற்கு சிரம்ப்பட்டார், அவரது பந்துகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகச்சிறந்த வகையில் செயல்படுவதாகவும் ஆதலால் இந்திய அணிக்கு உந்துதலாக அஸ்வின் இருப்பார் என நம்பிக்கை கொடுத்து ரோகித் சர்மா அஸ்வினை அணிக்குள் இணைக்க பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.