அஸ்வினை எல்லாம் இந்த லிஸ்டில் சேர்ப்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது ? தமிழக வீரருடன் வம்புச் சண்டைக்குப் போன சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ..!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அவர் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெருமளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

எந்தக் காலத்துக்கும் சிறந்த வீரர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் (Greatest of all-time ) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வீரர்கள் பட்டியலில் அஸ்வினை சேர்க்காதீர்கள் என்பதே அவரின் வாதமாக இருக்கிறது.

கிரிக்கெட்டில் இவ்வாறு (Greatest of all-time ) al ஏராளம் வீரர்கள் இருக்கிறார்கள், சுனில் கவாஸ்கர், சச்சின் டென்டுல்கர், விராத் கோலி இப்படியான பல வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால் அஸ்வினை இந்த பட்டியலில் சேர்ப்பதற்கு அஸ்வின் பெரிதாக என்ன சாதித்துவிட்டார் எனும் கேள்வியை மஞ்சரேக்கார் கேட்டுள்ளார்.

விளையாட்டு இணையதளம் ஒன்றில் முன்னாள் அவுஸ்திரேலிய ஜாம்பவான் கிரேக் சேப்பலுடன் இடம்பெற்ற கருத்துப் பகிர்வு ஒன்றிலே சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த கருத்தை பதித்துள்ளார்.

SENA எனப்படும் வெளிநாட்டு மண்ணில் அஸ்வின் பெரிதாக ஒன்றையும் சாதித்துவிடவில்லை , ஆகவே அவரையெல்லாம் இந்தப்பட்டியலில் சேர்க்கமுடியாது என தெரிவித்தார்.

ஏற்கனவே ஜடேஜா தொடர்பிலும் விசனத்தனமான கருத்துக்களைப் பகிர்ந்து வம்புச்சண்டையில் மாட்டிக்கொண்ட மஞ்சரேக்கார் இப்போது அஸ்வினையும் விட்டுவைக்கவில்லை .

இவரது இந்த கருத்து தொடர்பில் பலவித வாதப்பிரதிவாதங்கள் சமூகவலைத்தளங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.