ஆசியக் கிண்ணம் அதீத அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டவுள்ள இலங்கை -விபரம்…!

ஆசியக் கிண்ணத்தின் அனைத்துப் போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றாலும் இலங்கைக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கவுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, இந்த ஆண்டு ஆசிய கோப்பையை இலங்கை நடத்த திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக, ஆசிய கிண்ணத்தை இலங்கையின் உரிமையில் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற ஆசிய கிரிக்கட் சபை அண்மையில் தீர்மானித்த்து.

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி மற்றும் ஷார்ஜா ஸ்டேடியத்தை மையமாக கொண்டு நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய ஸ்ரீலங்கா கிரிக்கட், ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டிகள் நடத்தப்பட்டாலும், போட்டியை இலங்கை நடத்துவதால் இலங்கைக்கு சுமார் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஆசியக் கிண்ணப் போட்டிகள் ஆகஸ்ட் 27 முதல் செப்டெம்பர் 11 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.