ஆசியக் கிண்ண தொடர் வாய்ப்பினை இழந்தது இலங்கை!

ஆசிய சம்மேளன ஹொக்கி  தொடரின் அரையிறுதிப் போட்டியில், இலங்கை ஓமானிடம் தோல்வியடைந்துள்ளது.

ஆசிய சம்மேளன ஹொக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நேற்று இடம்பெற்றது

இலங்கை முதல் அரையிறுதியில் ஓமானை எதிர்கொள்ள மற்றைய அரையிறுதியில் பங்களாதேஷ் கஷகஸ்தானை எதிர்கொண்டிருந்தது.

இந்த அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கே 2022ஆம் ஆண்டிற்கான ஹொக்கி ஆசியக் கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இலங்கை ஓமானிடம் தோல்வியை தழுவி ஆசியக் கிண்ண வாய்ப்பினை இழந்திருக்கின்றது.