ஆசியக் கோப்பையின் முதல் போட்டி- இலங்கைக்கு அவமானகரமான தோல்வி!!

ஆசியக் கோப்பையின் முதல் போட்டி- இலங்கைக்கு அவமானகரமான தோல்வி!!

15 வது ஆசிய கோப்பை திருவிழா இன்று UAE யில் தொடங்கியது. போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடின.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

அந்த அழைப்போடு களம் இறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அழுத்தம் கொடுக்க முடிந்தது. முதல் ஓவரிலேயே குசல் மெண்டிஸ், சரித் ஆகியோரை விக்கெட்டை தாரைவார்த்தனர் .

நவீன் உல் ஹக்கின் பந்தில் மூன்றாவது நடுவரின் மோசமான முடிவு காரணமாக பதும் நிஸ்ஸங்க துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அப்போது இலங்கையின் இன்னிங்ஸ் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இருந்தது.

பின்னர் தனுஷ்க குணதிலக்க மற்றும் பானுக ராஜபக்ஷ நான்காவது விக்கெட்டுக்கு 44 ஓட்டங்களின் இணைப்பாட்டத்தை உருவாக்கினர். தனுஷ்க குணதிலக்க 17 ரன்கள் எடுத்து ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய மையன்றை போது கேட்ச் ஆனார். முஜிபர் 2 ரன்களில் வனிது ஹசரங்கவை ஆட்டமிழக்கச் செய்ய முடிந்த அதே வேளையில், முகமது நபியால் கேப்டன் தசுன் ஷனகவை வெளியேற்ற முடிந்தது.

5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 38 ரன்கள் எடுத்திருந்த போது, ​​இன்னிங்ஸின் அதிகபட்ச ஸ்கோர் அடித்த பானுகா ராஜபக்ச ரன் அவுட் ஆனார். மகிஷ் தீக்ஷனவும் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ஒன்பதாவது விக்கெட்டாக மதிஷ பத்திரன ஆட்டமிழந்தபோது, ​​இலங்கை ஸ்கோர் போர்டில் 75 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

பின்னர் கடைசி விக்கெட்டுக்காக தனித்து போராடிய சமிக கருணாரத்ன இலங்கை இன்னிங்ஸை 105 ரன்களுக்கு உயர்த்தினார். சமிகா 38 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் ஃபஸ்லா பரூக்கி 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் நபி மற்றும் முஜீப் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இலக்கை துரத்த களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோடி எளிதில் வெற்றி பெற்றது. குர்பாஸ் மற்றும் ஹஸ்ரதுல்லா ஆறு ஓவர்களில் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 83 ரன்கள் எடுத்தனர். ஆனால் ஏழாவது ஓவரின் முதல் பந்தில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்திருந்த குர்பாஸை ஹசரங்க வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

ஆப்கானிஸ்தான் சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஹஸ்ரத்துல்லா சசாய் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 37 ரன்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.