ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை …!

யு19 ஆசியக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் ஷார்ஜாவில் வியாழக்கிழமை மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதல் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஷைக் ரஷீத் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அரிஃபுல் இஸ்லாம் எடுத்த 42 ரன்கள்தான் வங்கதேசத்தின் அதிகபட்சமாக ஸ்கோர். 38.2 ஓவர்களில் வங்கதேச அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதளநேரம் இன்னும் ஒரு அரை இறுதி ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்றது.

147 ஓட்டங்களை மட்டுமே இலங்கை அணி பெற்றுக் கொண்டாலும்கூட  போட்டி 50வது ஓவர்வரை கொண்டு செல்லப்பட்டமை சிறப்பம்சம் .

70 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறினாலும் ஒன்பதாவது விக்கட்டில் பெறப்பட்ட 47 ஓட்டங்கள் இணைப்பாட்டம் இலங்கையை காப்பாற்றியது ,அதன் பின்னர் பாகிஸ்தான் இலகுவான 148 ஓட்டங்கள் இலக்கோடு துடுப்பெடுத்தாடினாலும் இலங்கை பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் பாகிஸ்தானை வெற்றிகொள்வதற்கு இடமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற  இலங்கை அணி நாளை வெள்ளிக்கிழமை (31) காலை 11 மணிக்கு இந்தியாவை இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதனித்துவ சாதனையைப் படைத்த பும்ரா-  இதுவெல்லாம் சாதாரண சாதனை கிடையாது ..!
Next articleஇந்தியாவுடனான தோல்வி- காரணத்தை தெளிவுபடுத்திய தென் ஆபிரிக்க அணித்தலைவர்..!