ஆசியர்களை பின்தள்ளி ஐசிசியின் ஆகஸ்ட் மாத விருதை வென்ற ஜோ ரூட்..!
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு மாதமும் ‘மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரரை’ தேர்வு செய்து கடந்த ஆறு மாதங்களாக விருதுகளை வழங்கி வருகிறது.
இதனடிப்படையில் கடந்த ஓகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் ரூட் பெற்றுக்கொண்டார்.
ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட்டமிழக்காத 180 ஓட்டங்கள் அடங்கலாக 507 ஓட்டங்களை குவித்தார்.
இது மாத்திரமல்லாமல் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்திற்கு ஜோ ரூட் முன்னேறினார். அதனால் சிறந்த ஐசிசி வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரோடு விருதுக்கு போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அஃப்ரிடி ஆகியோரும் போட்டியில் இருந்தாலும் அந்த விருதை ஜோ ரூட் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.