ஆசிய அணியை வீழ்த்தி Legends லீக் சாம்பியன் ஆனது உலக அணி ..!

ஆசிய அணியை வீழ்த்தி Legends லீக் சாம்பியன் ஆனது உலக அணி ..!

ஓமானில் இடம்பெற்று வந்த மூன்று அணிகளுக்கிடையிலான முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கெடுத்த பரபரப்பான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் சற்றுமுன் நிறைவுக்கு வந்துள்ளது .

டேரன் சமி தலைமையிலான உலக அணியும் மிஷ்பா எல் ஹக் தலைமையிலான ஆசிய அணிக்கும் இடையிலான இந்த போட்டி மிகப்பெரிய ஓட்டங்கள் நிறைந்த ஆட்டமாக இடம்பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

முதலில் துடுப்பெடுத்தாடிய டேரன் சமி தலைமையிலான உலக அணி 256/5 ஓட்டங்களை குவித்தது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மிஷ்பா  தலைமையிலான ஆசிய அணி 231 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடதக்கது.

ஆயினும் இறுதியில் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெரன் சமி தலைமையிலான உலக அணி வெற்றி பெற்று லெஜெண்ட்ஸ் லீக் தொடரின் சாம்பியன் மகுடத்தை சூடிக் கொண்டது.

ஆசிய அணியில் இலங்கை வீரர்களான டில்ஷான், உபுல் தரங்க ஜெயசூரிய, முரளி, சமிந்த வாஸ் , குலசேகர உள்ளிட்ட பல வீர்ர்கள் விளையாடியமை முக்கியமானது.

அந்த அணியின் பயிற்சியாளராக 96 ல் இலங்கைக்கு உலக கிண்ணம் வென்றுகவடுத்த அர்ஜுன ரணதுங்க ஆசிய அணியை பயிற்றுவித்து இருந்தவையும் நினைவுபடுத்தலாம்.

முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்ற லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மூலமாக நமது நட்சத்திரங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த தவறவில்லை என்பது பெருமைக்குரியது.

Previous articleசர்வதேச கிரிக்கெட்டில் பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டு தடை – ஐசிசி அதிரடி முடிவு
Next articleபங்களாதேஷை பழிக்குப் பழி தீர்த்தது இந்தியா -இளையோர் உலகக்கிண்ணத்தின் அரை இறுதிக்கான நான்கு அணிகளும் தேர்வாகின.