ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்…!

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்…

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம செயலாளர் ஜே ஷா (Jay Shah) அவர்கள், இன்று (18) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தார்.

ஆசிய கிரிக்கெட் சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திரு. ஜே ஷா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து 40 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி எஷ்லி டி சில்வா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
18.03.2022