ஆசிய கோப்பைக்கு தகுதிபெற்றது ஹாங்காங் அணி …!

ஆசிய கோப்பைக்கு தகுதிபெற்றது ஹாங்காங் அணி …!

ஆசிய கோப்பை போட்டி ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்க உள்ளது. ஆறு அணிகள் மோதும் இந்த ஆண்டுக்கான போட்டியில் விளையாடும் இறுதி அணியை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று நேற்றுடன் முடிவடைந்தது.

தகுதிச் சுற்றின் ஆறாவது போட்டி ஒரு முக்கியமான போட்டியாக மாறியது, ஏனெனில் அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பையில் விளையாடும் தகுதியீட்டும் நிலை காணப்பட்டது.

ஓமனில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹாங்காங் அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. Toss  வென்ற ஹாங்காங் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. 19 ஓவர்கள் 3 பந்துகள் முடிவில் களம் இறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி அனைத்து வீரர்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஹாங்காங் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே 10 ரன்களை தாண்ட முடிந்தது. அவர்களில் அதிகபட்சமாக அணித்தலைவர் ரிஸ்வான் 49 , சஃபர் ஃபரிட் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 41  பெற்றனர். சிறப்பாக பந்துவீசிய எஷான் கான் நான்கு ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஆயுஷ் சுக்லா 30 க்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலக்கை துரத்த களம் இறங்கிய ஹாங்காங் அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மூவரும் இம்முறையும் வெற்றியடைந்தனர். நிசாகத் கான் மற்றும் யாசீம் முர்தாசா ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர்.

அணித்தலைவர் நிசாகத் கான் 39 ரன்களையைம், யாசீம் முர்தாசா 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 58 ரன்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பார்பர் ஹயாத் 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்து ஹாங்காங் அணியை வெற்றிபெறச் செய்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஒரு ஓவர் எஞ்சியிருந்த நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஹாங்காங் அணி, ஆசிய கோப்பையின் குரூப் A-க்கு தகுதி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : 147/10 (19.3)
சுந்தங்காபோயில் ரிஸ்வான் 49(44), ஜாவர் ஃபரீத் 41(27)
எஷான் கான் 4/24, ஆயுஷ் சுக்லா 3/30

ஹாங்காங் அணி : 149/2 (19.0)
யாசீம் முர்தாசா 58(43), நிசாகத் கான் 39(39), பாபர் ஹயாத் 38(26)*
பசில் ஹமீட் 1/31