ஆசிய கோப்பை இலங்கை அணியில் திடீர் மாற்றம்- 3 வீரர்கள் நீக்கம்..!

ஆசிய கோப்பை இலங்கை அணியில் திடீர் மாற்றம்- 3 வீரர்கள் நீக்கம்..!

20 பேர் கொண்ட ஆசியக் கோப்பை அணியில் இடம்பிடித்த துஷ்மந்த சமீர, பயிற்சியின் போது (இடது காலில்) காயம் ஏற்பட்டதால், ஆசிய கோப்பையில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

காயம் காரணமாக சமீர சுற்றுப்பயணத்தில் பங்கேற்காததால், கிரிக்கெட் தேர்வாளர்கள் நுவான் துஷாராவை 20 பேர் கொண்ட இலங்கை அணியில் சேர்த்தனர்.

இதற்கிடையில், 20 பேர் கொண்ட அணியில், பின்வரும் 3 வீரர்கள் காத்திருப்பு (Reserve) வீரர்களாக இருப்பார்கள் மற்றும் அணியுடன் பயணிக்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சந்திமால், நுவனிது பெர்னாண்டோ ,நுவான் துஷார ஆகிய வீரர்கள் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு மேலதிக வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.