ஆசிய ரக்பி சாம்பியனான இலங்கைக்கு Sri Lanka cricket வழங்கும் பரிசில்..!

ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் பிரிவில் வெற்றி பெற்ற இலங்கை ரக்பி அணிக்கு ரொக்கப்பரிசு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை ரக்பி அணிக்கு 30,000 அமெரிக்க டொலர்களை ரொக்கப் பரிசாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்காக பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முன்னதாக பணப்பரிசுகளை வழங்கியிருந்தது.