ஆசிய விளையாட்டு விழாவிற்கான தகுதிகாண் போட்டியில் புவிதரன் புதிய இலங்கை சாதனை..!

 ஆசிய விளையாட்டு விழாவிற்கான தகுதிகாண் போட்டியில், ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை இராணுவ கழகத்தின் ஏ.புவிதரன் புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்.

போட்டியில் அவர் 5.15 மீட்டர் உயரத்திற்கு பாய்ந்து திறமையை வெளிப்படுத்தினார்.

தியகம மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் ஏ.புவிதரன் இந்த மைல்கல்லை எட்டினார்.

இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தின் அனுசரணையில் இந்த தகுதிகாண் போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்று ஆரம்பமான தகுதிகாண் போட்டிகள் நாளையும் நடைபெறவுள்ளன.

via -Newsfirst