நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் எந்த நிலையிலும் (position) பெட்டிங் செய்ய தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸின் யூடியுப் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கேகேஆர் ஷ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடிக்கு வாங்கியது.
வலது கை துடுப்பாட்ட வீரரான ஷ்ரேயாஸ் ஐயர், முன்னதாக ஐபிஎல்லில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.