ஆட்டமிழப்பு வழங்க மறுத்த நடுவர்- நடையைக் கட்டி கனவான் தன்மையை காண்பித்த இந்திய வீராங்கனை -குவியும் பாராட்டுகள் ..!
அவுஸ்ரேலியாவிற்கான கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் அவுஸ்திரேலியா மகளிர் அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .
பிங் போல் டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் நிறைவுக்கு வந்த நிலையில் இந்திய மகளிர் அணி வலுவான நிலையில் காணப்படுகிறது.
ஸ்மித்ரிி மந்தனா இந்த போட்டியில் சதமடித்து இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த காரணமாக இருந்தார்.
இந்த போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடி கொண்டிருந்தபோது பூனம் ரவுட் எனப்படும் இந்திய வீராங்கனை நடந்து கொண்ட விதம் சமூக வலைத்தளங்களில் மாத்திரமல்லாது கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் ஈர்த்திருக்கிறது.
இந்த போட்டியில் இவர் ஆட்டம் இழந்ததாக நடுவரிடம் முறையிட்டு செய்யப்பட்டபோது ஆட்டமிழப்பு வழங்க நடுவர் மறுத்தார், ஆனால் திடீரென குறித்த வீராங்கனை ஆடுகளம் விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
– Appeal for caught behind
– Given not out…
But Punam Raut walks! #AUSvIND pic.twitter.com/Q9fzVuh5Zt
— 7Cricket (@7Cricket) October 1, 2021
இந்த சம்பவம் அவுஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு மாத்திரமல்லாமல் நடுவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் உண்மையில் கனவான்களின் ஆட்டம் என வர்ணிப்பார்கள், ஆடம் கில்கிறிஸ்ட், குமார் சங்ககார இந்த மாதிரியான வீரர்கள் நடுவர் ஆட்டமிழப்பு வழங்க மறுத்தும் வெளியேறிய சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இப்போது பூனம் ரவுத் இந்த பெருமைமிகு பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.