லோர்ட்ஸில் நடந்த ஒரு காவிய டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதைத் தவிர, ஜேம்ஸ் ஆண்டர்சன் Vs ஜஸ்பிரித் பும்ரா சண்டை விளையாட்டின் முக்கிய பேசுபொருளாக மாறியது.
3 வது நாளில் பும்ரா, ஆண்டர்சனுக்கு பவுன்சர்களை சரமாரியாக வீசினார், இந்திய கேப்டன் விராட் கோலியும் இந்த செயலில் இறங்கி ஆண்டர்சனைப் கோப்ப்படுத்தினார்.
இதெல்லாம் நடந்து முடிந்து இன்னிங்ஸ் முடிவில், பும்ரா ஓடிச்சென்று ஆண்டர்சனின் முதுகில் ஒரு நட்பான சைகையில் தட்டினார், ஆனால் விரக்தியடைந்த ஆண்டேர்சன் சமாதானமாகவில்லை.
இந்தியாவின் முன்னணி ஆஃப்-ஸ்பின்னர் ரவி அஷ்வின் 3 வது நாளில் பும்ரா மற்றும் ஆண்டர்சனுக்கு இடையே என்ன நடந்தது என்பதை இப்போது வெளியில் கசிய விட்டுள்ளார்.
‘இத்தனை நேரம், நீங்கள் 80 m/h இல் பந்துவீசிக் கொண்டிருந்தீர்கள்; திடீரென்று என்னைப் பார்த்தவுடன், நீங்கள் ஏன் 90 மீ/மணி வேகத்தில் பந்துவீசுகிறீர்கள் என ஆண்டேர்சன் பும்ராவிடம் கேட்டுள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யூடியூப் நேர்காணல் ஒன்றில் இந்தியாவின் களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்ரீதருடன் கலந்துரையாடினார்.
அழகு தமிழில் இருவரும் வபேசி ஆணடர்சன் மற்றும் பும்ரா ஆகியோருக்கிடையில் மைதானத்தில் நடந்த சண்டையின் முழு விபரத்தை வெளிப்படுத்தியுள்ளார் .
அந்த காணொளியில் முழுமையான விபரத்தை தருகிறோம் ????