ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் கம்மின்ஸ்..!

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் கம்மின்ஸ்..!

ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட்டிலே திறமையை வெளிப்படுத்தி வருகின்ற வீரர்களுக்கான விருதுகளை ICC  அறிவித்து வருகின்றது.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக ஆஸ்திரேலியாவை வழிபடுத்தி ஒரு நாள் போட்டிகளுக்கான உலக்கிண்ணம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கிண்ணத்தை வென்றமை, Ashes தொடரை தக்க வைத்தமை இவ்வாறான ஏராளமான சாதனைகளை புரிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் கம்மின்ஸ் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.