ஆதில் ரஷீத் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்பந்தம் ஆகினர்..!

ஆதில் ரஷீத் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒப்பந்தம் ஆகினர்..!

இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் இந்த ஆண்டின் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகளுக்காக லோகேஸ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இது மாத்திரமல்லாமல் பிரண்டன் மெக்கலம் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நியூசிலாந்தின் டிம் சவுத்தியை ஒப்பந்தம் செய்திருப்பதாக இன்று அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அந்த அணியின் பெட் கம்மின்ஸ் இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளில் விளையாட முடியாது என அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இப்போது நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி இணைக்கப்பட்டிருப்பதாக  அறிவிக்கப்பட்டிருக்கிறது.