ஆப்கானிஸ்தானில் ரசிகர்களோடு ரசிகர்களாக கால்பந்தாட்ட போட்டியை கண்டு களித்த தலிபான்கள் ..!

ஆப்கானிஸ்தானில் ரசிகர்களோடு ரசிகர்களாக கால்பந்தாட்ட போட்டியை கண்டு களித்த தலிபான்கள் ..!

ஆப்கானிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியை ரசிகர்களோடு ரசிகர்களாக ஆயுதங்கள் தரித்த தலிபான்கள் போட்டியை பார்த்து ரசித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

https://vilaiyaddu.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

ஏற்கனவே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு  19 வயதான இளம் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் அமெரிக்க விமானத்தில் தப்பிச் செல்ல முற்பட்டு மரணத்தை தழுவிக்கொண்டார், இந்த நிகழ்வுக்கு பின்னர் அங்கு இடம்பெற்ற மிகப்பெரிய கால்பந்தாட்ட இந்நிகழ்வில் அந்த வீரருக்கான பிரார்த்தனைகள் மைதானத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.

 இது மாத்திரமல்லாமல் ரசிகர்களோடு ரசிகர்களாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் தலிபான் போராளிகள் ஆயுதம் தரித்த வண்ணமாக போட்டியை பார்த்து ரசித்து, பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளனர்.

இதனுடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.