ஆப்கானிஸ்தானை சந்திக்கவுள்ள இலங்கை T20 அணி அறிவிப்பு..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வனிது ஹசரங்க தலைமையிலான குழாமில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டித் தொடரில் இடம் பெறாத முன்னாள் கேப்டன் தசுன் ஷானக்க T20 அணியில் இடம் பிடித்திருப்பது சிறப்பு.

முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர முதலில் T20 அணிக்கு பெயரிடப்பட்டார், ஆனால் காயம் காரணமாக அவர் T20 தொடரில் விளையாட மாட்டார் என்று இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதன்படி, இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ அணியில் இடம்பிடித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான T20 போட்டித் தொடர் எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் இரவு 7 மணிக்கு தொடங்கும்.

அணி
1. வனிந்து ஹசரங்க – கேப்டன்
2. சரித் அசலங்க – துணை கேப்டன்
3. பாத்தும் நிஸ்ஸங்க
4.குசல் மெண்டிஸ்
5. தனஞ்சய டி சில்வா
6. குசல் ஜனித் பெரேரா
7.ஏஞ்சலோ மேத்யூஸ்
8. தசுன் ஷானக
9. மகேஷ் தீக்ஷன
10. பினுர பெர்னாண்டோ
11.மதீஷ பத்திரன
12. தில்ஷான் மதுஷங்க
13. நுவான் துஷார
14. அகில தனஞ்சய
15. கமிந்து மெண்டிஸ்
16.சதீர சமரவிக்ரம

 

 

 

Previous articleICC under 19 | Worldcup | இந்தியாவுக்கே வில்லனான இந்திய வம்சாவளி – யார் இந்த ஹர்ஜாஸ் சிங் ..!
Next articleஇலங்கையை சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..!