ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இலங்கை அணியை ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
தசுன் ஷானக தலைமையிலான குழாமில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர், திமுத் கருணாரத்ன மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர், மேலும் அஞ்சலோ மெத்யூஸும் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். சதீர சமரவிக்ரமவும் இடம்பிடித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க காலில் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார், ஆனால் அவரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். வனிந்து தற்போது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர் விளையாடுவதற்கு அனுமதி கிடைத்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவார்.
இதுவரை சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத 29 வயதான துஷான் ஹேமந்த, லெக் ஸ்பின்னராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது காலில் காயம் அடைந்த குசல் ஜனித் பெரேரா இன்னும் புனர்வாழ்வு பெற்று வருவதால் அவர் இந்த அணியில் இடம் பெறவில்லை.
ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரனவும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சி, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷான் மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகிய வீரர்கள் ஒருநாள் அணியில் இடம் இழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் பகல் போட்டியாக நடைபெற உள்ளது.
முதல் ஒரு நாள் போட்டி ஜூன் 2ம் தேதியும், இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜூன் 4ம் தேதியும், கடைசி ஒரு நாள் போட்டி ஜூன் 7ம் தேதியும் நடக்கிறது.
இலங்கை அணி 👇
1) தசுன் ஷானக – கேப்டன்
2) பாத்தும் நிஸ்ஸங்க
3) திமுத் கருணாரத்ன
4) குசல் மெண்டிஸ் (WK) – துணை கேப்டன்
5) ஏஞ்சலோ மேத்யூஸ்
6) சரித் அசலங்க
7) தனஞ்சய டி சில்வா
8) சதீர சமரவிக்ரம – (WK)
9) சாமிக்க கருணாரத்ன
10) துஷான் ஹேமந்த
11) வனிந்து ஹசரங்க
12) லஹிரு குமார
13) துஷ்மந்த சமீர
14) கசுன் ராஜித
15) மதீஷ பத்திரன
16) மகேஷ் தீக்ஷன
எமது YouTube தளத்திற்கு 👇