ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை..!

 ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை..!

இலங்கை அணிக்கும், வருகை தந்த ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களைப் பெற்றது.

பதும் நிஸ்ஸங்க 25 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 51 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

அஸ்மதுல்லா உமர்சாய் 2 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதில் இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களில் 115 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அஞ்சலோ மெத்தியூஸ் 2 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிந்தது.

அதன்படி, 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது.