ஆரம்பித்தது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் -போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி, முதல் துடுப்பாட்டம் யார் தெரியுமா ?

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதிப் போட்டி இன்று ஆரம்பித்திருக்கிறது.

நேற்று ஆரம்பமாகும் என எதிர்பார்கப்பட்ட இந்த போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக ஆரம்பிக்கவில்லை, இன்று மூன்று மணிக்கு போட்டி ஆரம்பிக்கவுள்ள அதேநேரம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்திருக்கும் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற NZ அணி தங்களுக்கு சாதகமான முடிவை மேற்கொண்டு இருக்கிறது.

முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பம் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, இதன் அடிப்படையில் NZ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது கவனிக்கத்தக்கது.

இந்திய அணியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதே அணிதான் விளையாடுகிறது, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் பூம்ரா, ஷாமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்து அணியில் எதிர்பார்க்கப்பட்ட அதே அணி இன்று விளையாடுகிறது, இரு அணிகளின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் 98 ஓவர்கள் வீசப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

Head 2 Head

விளையாடியது – 59

இந்தியா – 21

நியூசிலாந்து– 12

இந்தியா XI
விராட் கோஹ்லி (Captain), ரோஹித் சர்மா, சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பான்ட் (WK), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

நியூசிலாந்து  XI
கேன் வில்லியம்சன் (Captain), டெவன் கான்வே, டாம் லாதம், ரோஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், BJ வாட்லிங் (WK),கொலின் டீ கிராண்ட்ஹோம், கைல் ஜேமீசன், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் , நீல் வாக்னர்