ஆர்சிபி அணியின் No 3 வீரர் யார் ?வர்ணனையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஆர்சிபி வீரர்..!
14வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி நிறைவுக்கு வந்தது.
இந்த போட்டியில் மிகச்சிறப்பாக RCB அணி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.
இதன் மூலமாக 7வது வெற்றியை பெற்றுக் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், Play off செல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட மூன்றாவது அணியாக இன்று மாறியிருக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது வர்ணனையாளர்கள் ஒரு கேள்வி எழுப்பினர் .
RCB யின் மூன்றாம் இலக்கத்தில் விளையாடக்கூடிய வீரர் யார் என கேள்வி எழுப்பிய போது, மூன்றாம் இலக்கத்தக தான் துடுப்பெடுத்தாட வேண்டும் என்று சஹால் சைகை காண்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக வர்ணனையாளர் சிரித்ததோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த தொடரில் ஆர்சிபி அணி மூன்றாம் இலக்கத்துக்கு பொருத்தமான வீரர் ஒருவர் இல்லாது தடுமாறியிருக்கிறது.
பரிட்டார், சபாஷ் அஹமத், வாஷிங்டன் சுந்தர் வரிசையில் இப்போது ஸ்ரீகர் பரத்தை மூன்றாமிலக்கத்தில் ஆடுகளம் அனுப்பி வெற்றி கண்டிருக்கிறது ஆர்சிபி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணியினுடைய வெற்றிக்கு ஸ்ரீதர் பெற்ற 44 ஓட்டங்கள் காரணமாக இருந்தமை நினைவுபடுத்ததக்கது.
150 என்கின்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி 17.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
— pant shirt fc (@pant_fc) September 29, 2021