ஆர்சிபி அணியுடனான போட்டியில் ராஜஸ்தானின் மிக மோசமான தோல்விக்கு என்ன காரணம் தெரியுமா ?

ஆர்சிபி அணியுடனான போட்டியில் ராஜஸ்தானின் மிக மோசமான தோல்விக்கு என்ன காரணம் தெரியுமா ?

14வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி  நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் மிகச்சிறப்பாக RCB அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.

இதன் மூலமாக தொடரில் 7வது வெற்றியை பெற்றுக் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், Play off செல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட மூன்றாவது அணியாக இன்று மாறியிருக்கிறது.

ஆர்சிபி அணியினுடைய வெற்றிக்கு ஸ்ரீதர் பெற்ற 44 ஓட்டங்கள், மக்ஸ்வெல் பெற்ற அதிரடி அரைச்சதம் காரணமாக இருந்தமை நினைவுபடுத்ததக்கது.

150 என்கின்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி 17.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் எங்கே தோற்றது ?

இந்த போட்டியை பொறுத்தவரைக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மிகப் பலமான நிலையில் போட்டியை ஆரம்பித்தது, ஆரம்ப வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் இவென் லூயிஸ் ஆகியோர் மீது அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். 11 ஓவரிலேயே இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, ஆனால் அதற்குப் பின்னர் விராட் கோலியின் மதிநுட்பமான  தலைமைத்துவம் அணியின் போக்கை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தியது.

200 ஓட்டங்களை குவித்து விடுவார்கள் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மீதமான 9 ஓவர்களில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெறுமனே 49 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது.

சஹால் அது மாத்திரமல்லாமல் சபாஷ் அஹமத், ஹர்ஷால் பட்டேல் ஆகிய பந்து வீச்சாளர்கள் இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பாக பந்துவீசினர்.

இதுவே ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினுடைய தோல்விக்கு பிரதானமான காரணமாக அமைந்தது.

இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் RCB 3 ம் இடத்தைப் பிடித்துக்கொண்டது.