ஆர்ஜன்டீனாவை தோற்கடிக்க காரணமான சவுதி அரேபியாவின் சாதனை நாயகனுக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை நிறைவு…!

உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் சவுதி அரேபியா தனது கால்பந்து வரலாற்றில் செவ்வாய்க்கிழமை மிகவும் பிரபலமான வெற்றியை பதிவு செய்தது,

ஆனால் அர்ஜென்டினாவின் கோல் வாய்ப்பொன்றை தடுக்க முற்பட்ட கோல்காப்பாளர் அல்-ஓவைஸின் அபார முயற்சிக்கு யாசர் அல்-ஷஹ்ரானி வலிமிகுந்த விலையைச் செலுத்தினார்.

அந்த சந்தர்பத்தில் இருவரும் முட்டிமோதிக்கொண்ட தருணத்தில் அல்-ஷஹ்ரானி தரையில் விழுந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்,

ஸ்லோவேனிய நடுவர் ஸ்லாவ்கோ வின்சிக் 96வது நிமிடத்தில் ஆட்டத்தை நிறுத்தியதுடன் மருத்துவ உதவியை நாடினார்.

இந்ததிலையில் 30 வயதான அல்-ஷஹ்ரானிக்கு தாடை உடைந்து, முக எலும்புகள் உடைந்ததுடன் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டது.

“ரியாத்தில் உள்ள தேசிய மருத்துவமனையில் யாசர் அல்-ஷஹ்ரானிக்கு கணைய சுரப்பியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்று சவுதி கூட்டமைப்பு சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

சவூதி தேசிய அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் அல்-ஷஹ்ரானி தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து “எனது உடல்நிலை நன்றாக உள்ளது, உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி, சவுதி தேசிய அணியின் ரசிகர்கள் வெற்றி பெறத் தகுதியானவர்கள் என்று உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். “என்று கூறினார்.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇