ஆர்ஜென்டினா ,பிரேசில் கால்பந்தாட்ட போட்டி எத்தனை மணிக்கு ?

ஆர்ஜென்டினா ,பிரேசில் கால்பந்தாட்ட போட்டி எத்தனை மணிக்கு ?

கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் தென்னமெரிக்க கண்ட நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் இடம்பெற்று வருகின்றன .

பிரேசில் அணி 7 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றிபெற்று முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது ,இரண்டாவது இடத்தில் ஆர்ஜெண்டினா அணி காணப்படுகிறது .

இந்த நிலையில் தென்னாபிரிக்க கண்ட நாடுகளுக்கிடையிலான உலக கிண்ணதகுதிகாண் போட்டிகளில் ஆர்ஜன்டீனா மற்றும் பிரேசில் அணிகள் விளையாடுகின்ற போட்டி இடம்பெற உள்ளது.

இந்த போட்டி சரியாக இலங்கை, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதாவது திங்கட்கிழமை 6 ம் திகதி அதிகாலை வேளையில் இந்தப் போட்டி இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் இறுதியாக கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் மோதியபோது மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது

மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகிய நட்சத்திரங்கள் இரு அணிகளிலும் இருக்கின்ற காரணத்தால், கால்பந்து ரசிகர்கள் இப்பொது இந்த போட்டிக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்

ஞாயிறு நள்ளிரவு 12.30 காக எல்லோரும் காத்திருப்போம்.