ஆர்ஜென்ரீனாக்கு மற்றுமொரு வெற்றியை தேடி தந்தார் மெஸ்ஸி
Copa America 2021 இன் இறுதி குழு நிலைப் போட்டியில் Argentina மற்றும் Bolivia அணிகள் மோதின. ஏற்கனவே காலிறுதிக்கு தகுதி பெற்ற Argentina குழுவில் முதலிடம் பிடிப்பதற்காகவும் Bolivia ஆறுதல் வெற்றிக்காகவும் களமிறங்கின.
போட்டியின் ஆரம்பத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய Argentina அணிக்கு Gomez ஒரு கோலினையும் அணி தலைவர் மெஸ்ஸி இரு கோல்களினையும் Lautaro ஒரு கோலினையும் பெற Argentina 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. Bolivia சார்பில் Saavedra ஒரு கோலினைப் பெற்றார்.
Argentina அணி தனது குழுவில் முதல் இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் Ecuador அணியை இலங்கை நேரப்படி ஜூலை 6 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு எதிர் கொள்கிறது.