ஆறு நாட்கள் இடைவெளியில் ஐந்து 20-20 போட்டிகள், பங்களாதேஷ் பறக்கும் அவுஸ்ரேலியா .!
பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஐந்து டுவென்டி 20 போட்டிகள் அட்டவணை படுத்தப்பட்டதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்திருக்கிறது.
எதிர் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலக டுவென்டி டுவென்டி தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதான பயிற்சிகளுக்காக பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 5 போட்டிகள் கொண்ட தொடர் அட்டவணை படுத்தப்பட்டுள்ளது.
ஆறு நாட்கள் இடைவெளியில் இந்த ஐந்து ட்வென்டி ட்வென்டி போட்டிகளும் நடைபெற உள்ளமை கவனிக்கத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது, கொரோனா தொற்றுடன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதால் சில வேளைகளில் இந்த தொடர் பாதிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
எது எவ்வாறாயினும் ஒரு வாரத்திலேயே 5 போட்டிகளும் அட்டவணைப்படுத்தப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.