ஆறு நாட்கள் விளையாடப் போகும் ICC டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி -ஐசிசி அறிவிப்பு..!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் டெஸ்ட் உலகக்கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் வருகின்ற ஜூன் 18ஆம் திகதி இடம்பெற இருக்கிறது.

இந்த போட்டி தொடர்பிலான சில தீர்மானங்களையும் நடைமுறைகளையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்திருக்கின்றது.

இதன்படி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி என்கின்ற காரணத்தால், சில வேளைகளில் குறித்த டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி அற்ற நிலையில் (Draw) முடிவுக்கு வருமாக இருந்தால் இரண்டு நாடுகளும் இணை சாம்பியன்களாக (JOINT CHAMPIONS ) அறிவிக்கப்படுவார்கள் என்று ஐசிசி அறிவித்திருக்கின்றது.

 

இது மாத்திரமல்லாமல் முதல் ஐந்து நாட்களும் போட்டி விளையாடப்படும் தருணத்தில் சில வேளைகளில் மழை காரணமாகவோ, Bad light காரணமாகவோ போட்டி தடைப்படும் நிலமையைக் கருத்தில்கொண்டு போட்டி 6 வது நாளுக்கும் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

5 நாட்களின்போது, முன்னதாக போட்டி நிறுத்தப்பட்ட நேர விரயம் கால விரயத்தை கருத்தில் கொண்டும் ஆறாவது நாளுக்கு போட்டி கொண்டு செல்லப்பட்டு முடிவு தீர்மானிக்கப்படும்.

அதனை 5 வது நாளின் இறுதி மணித்தியாலத்தில் போட்டி நடுவர்கள் இரு அணிகளின் தலைவர்களுக்கும் தெரியப்படுத்துவார்கள் என்றும் புதிய நடைமுறை அறிவிப்பை ICC வெளியிட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.