வரலாற்றுப் பெருமைமிகு அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை கிரிக்கெட் அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.
இதன்படி 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் டிசம்பர் 8 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
2 வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் டிசம்பர் 16 ம் திகதியும், 3 வது போட்டி மெல்போர்ன் MCG மைதானத்தில் பொக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26 யிலும் ஆரம்பிக்கவுள்ளது.
4 வது டெஸ்ட் ஜனவரி 5 ல் சிட்னி மைதானத்திலும், 5 வதும் இறுதியான டெஸ்ட் போட்டி ஜனவரி 14 ம் திகதியும் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.