ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் மகுடம் சூடி புதிய உலக சாதனை படைத்த நடால்…!
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்று வந்த இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்பனிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் ஆகி மகுடம் சூடிக் கொண்டார்.
ரஷ்யாவின் மெட்வதேவ் மற்றும் ஸ்பெயினின் ரஃபெல் நடால் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இந்த ஆடவர் பிரிவில் ஒற்றையர் இறுதி ஆட்டம் கிட்டத்தட்ட 5 மணி 24 நிமிடங்கள் வரையிலும் நீடித்தது .
முதல் இரண்டு செட்களையும் இலகுவாக கைப்பற்றியிருந்த மைட்வதேவ் இறுதி மூன்று செட்களையும் கோட்டைவிட்டார், முதல் இரண்டு செட்களையும் நடால் தவறவிட்டாலும் போராட்டத்தை வெளிப்படுத்தி மீண்டு வந்து இறுதி மூன்று செட்களையும் கைப்பற்றி 21 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் சூடிக்கொண்டார்.
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் மட்டுமேதான் ‘களிமண் தரையின் ராஜா’ வாக இருக்கும் நடால் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில் மட்டுமே மகுடம் சூட முடியும் எனும் குற்றச்சாட்டு நீண்ட காலமாய் இருக்கிறது.
களிமண் தரையில் இடம்பெறுகின்ற அந்தப் போட்டிகளில் மட்டும் மொத்தம் 13 மகுடங்களை சூடியிருக்கும் நடால், மற்றைய போட்டிகளை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், விம்பிள்டன் போட்டிகளில் இவை எல்லாவற்றிலும் இவ்விரண்டு கிண்ணங்களை தான் இவர் கைப்பற்றியிருக்கிறார் .
இன்று கைப்பற்றியது ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளின் இரண்டாவது பட்டமாக அமைந்ததோடு ஒட்டுமொத்தமாக இருபத்தோராவது மகுடமாக அமைந்தது.
டென்னிஸ் உலகின் மிகப்பெரிய Big3 என அழைக்கப்படும் ஜோகோவிச், நடால் பெடரர் ஆகியோர் தலா 20 கிராண்ட்ஸ்லாம் சூடிக்கொண்டு வரலாறு படைத்திருந்த நிலையில் 21ஆவது கிராண்ட்ஸ்லாம் மகுடத்தை சூடிக்கொண்டு இன்று புதிய உலக சாதனை படைத்து அசத்தினார் நடால்.
2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த மூன்று வீரர்களும் இடம்பெற்றிருக்கும் மொத்தமான 78 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 59 கிராண்ட்ஸ்லாம் மகுடங்களை இவர்கள் மூவருமே தான் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் சுட்டிக் காட்டக் கூடிய விஷயம்.
மிகப்பெரிய போராட்டத்துக்கு மத்தியில் 21ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை சூடியிருக்கும் நடாலை வாழ்த்துவோம்.