ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது இலங்கை இளையோர் அணி..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி, இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா அணி தோல்வியின்றி சுப்பர் 06 சுற்றுக்கு தகுதி பெற்றது. எனினும் இலங்கையும் சுப்பர் 06 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 49.5 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தினுர களுபஹன 64 , ரவிஷான் டி சில்வா 30  பெற்றனர். கால்லம் வைல்டர் 28 க்கு 03 விக்கெட்டுக்களையும், மஹி பியர்ட்மேன் 30 க்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 48.5 ஓவர்களில் 04 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.

ரியான் ஹிக்ஸ் ஆட்டமிழக்காமல் 77 , ஹாரி டிக்சன் 49 , டொம் கேம்ப்பெல் ஆட்டமிழக்காமல் 33  பெற்றனர். பந்துவீச்சில் விஷ்வ லஹிரு 24 க்கு 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.