ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பயிற்சியின் போது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காலில் காயம் அடைந்து தள்ளாடினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டத்தில் ஸ்டார்க் விளையாடினார், இடது கை ஆட்டக்காரரான ஸ்டார்க் கிரிக்கெட்டில் இருந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஓய்வு எடுத்து, ஐசிசி டி20 உலகக் கோப்பைக்காக துபாய்க்கு வருவதற்கு முன்பு ,IPL உட்பட எந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
குயின்ஸ்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணியில், அவரது மனைவி ஆஸ்திரேலியாவின் மகளிர் வீராங்கனை அலிசா ஹீலியுடன் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
அவரது காலில் ஏற்பட்ட காயம் இப்போது வியாழக்கிழமை இலங்கைக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தில் ஸ்டார்க்கை சந்தேகத்திற்குரிய வீரராக ஆக்கியுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பிந்திய தகவலுக்காக காத்திருப்போம்.